கோவில்பட்டியில் ரூ.2 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


கோவில்பட்டியில் ரூ.2 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 July 2019 4:30 AM IST (Updated: 11 July 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் அட்சயா உத்தரவின்பேரில், நகரசபை சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் காஜா, சுரேஷ்குமார், வள்ளிராஜ், திருப்பதி உள்ளிட்ட குழுவினர் நேற்று கோவில்பட்டி மெயின் ரோடு, பண்ணைத்தோட்டம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், குடோன்களில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது 2 குடோன்களில் பதுக்கப்பட்ட மொத்தம் 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சில கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்தனர். நேற்று நடந்த சோதனையில் மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து 2 குடோன்களின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று கடைக்காரர் களிடம் அறிவுறுத்தப்பட்டது.

Next Story