ராமேசுவரம் கோவில் ரதவீதியில் மந்தகதியில் பாதாள சாக்கடை பணிகள்; விரைந்து முடிக்க பக்தர்கள் வலியுறுத்தல்
ராமேசுவரம் கோவில் ரத வீதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதால் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ராமேசுவரம்,
அகில இந்திய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளில் பக்தர்கள் நீராடிச் செல்லும் கழிவுநீர் மற்றும் மழைக்காலங்களில் பிரகாரங்களில் தேங்கி நிற்கும் மழை நீர் ஆகியவை வெளியே செல்ல வசதியாக, கோவிலின் வடக்கு ரத வீதி சாலையில் இருந்து கிழக்கு ரத வீதி சாலை மற்றும் தெற்கு ரத வீதி சாலை வரையிலும் நெடுஞ்சாலை துறையின் மூலம் ரூ.3½ கோடியில் வாருகால் அமைக்கும் பணி கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இதற்காக வடக்கு ரத வீதி சாலை, கிழக்கு ரத வீதி மற்றும் தெற்கு ரத வீதி வரையிலும் சுமார் 4 அடி உயரத்திற்கு குழி தோண்டப்பட்டு கான்கிரீட் தளம் போடப்பட்டு வாருகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நகராட்சியின் மூலம் பாதாள சாக்கடை திட்ட பணியும் கோவிலின் ரதவீதிகளில் நடந்து வருகிறது.
வாருகால் அமைக்கும் பணி மற்றும் பாதாள சாக்கடை பணிகள் ஒரே நேரத்தில் நடந்து வருவதால் கோவில் ரதவீதிகளின் சாலைகளில் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டும், பெரிய குழிகளாகவும் காட்சியளிக்கிறது.
குறிப்பாக, வாருகால் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டுள்ள பெரிய பள்ளம், குழிகளில் ஏராளமான கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த பள்ளம் அருகே தடுப்புகள் வைக்கப்படவில்லை. கயிறுகளும் கட்டப்படவில்லை. இதனால் பலர் அந்த பள்ளத்திலும், கம்பியின் மீதும் விழும் அபாயம் இருந்து வருகிறது.
ராமேசுவரம் கோவிலின் முக்கிய திருவிழாவான ஆடித்திருக்கல்யாண விழாவானது வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. திருவிழா தொடங்கும் நாள் முதல் கோவிலில் இருந்து தினமும் சாமி-அம்பாள் பல விதமான வாகனங்களில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆகஸ்டு 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறு கிறது.
இந்த நிலையில் கோவிலின் ரத வீதிகளில் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டும், சாலைகள் முழுமையாக சேதமடைந்த நிலையிலும் அலங்கோலமாக காட்சியளித்து வருவது பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டு ஆடி திருக்கல்யாண திருவிழாவில் தேரோட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே ராமேசுவரம் கோவில் ரத வீதியில் மந்த கதியில் நடந்து வரும் வாருகால் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடித்து ரத வீதிகளில் புதிதாக சாலை அமைக்க கலெக்டர் வீரராகவராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story