மாவட்ட செய்திகள்

உத்திரமேரூர் அருகே பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கிய 2 பேர் கைது + "||" + Two arrested for attacking petrol station employee

உத்திரமேரூர் அருகே பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

உத்திரமேரூர் அருகே பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
உத்திரமேரூர் அருகே பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் அடுத்த பெருநகர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பெட்ரோல் போட கூறினார்கள். பெட்ரோல் பங்க் ஊழியர் தினகரன் (வயது 47) பெட்ரோல் நிலையத்தை மூடி விட்டோம். பெட்ரோல் போட இயலாது என்று கூறினர். அதற்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் நாங்கள் வக்கீல்கள் எங்களுக்கே பெட்ரோல் இல்லையென்று சொல்கிறாயா என்று கூறி தினகரனை சரமாரியாக தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து தினகரன் பெருநகர் போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து பையனூர் காலனியை சேர்ந்த இந்தியன் என்கிற அப்பு (22), அதே ஊரை சேர்ந்த ராஜ்குமார் (22) ஆகியோரை பிடித்து விசாரித்ததில் பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கியதையும், மேலும் தாங்கள் இருவரும் வக்கீல்கள் இல்லை என்பதையும் ஒப்புகொண்டனர்.

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அனுமதி இன்றி கருப்பு கொடி கட்டிய 2 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் அறிவித்தது.
2. மதுரை அருகே கள்ளக்காதலனை கொலை செய்து எரித்த பெண் கைது; தற்கொலை நாடகம் நடத்தியது அம்பலம்
மதுரை அருகே கள்ளக்காதலனை கொலை செய்து எரித்து தற்கொலை நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
3. வானூர் பகுதியில், தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது
வானூர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
4. கும்பகோணத்தில் கோஷ்டி மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து 4 பேர் கைது
கும்பகோணத்தில் கோஷ்டி மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கைது - சர்வதேச நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்தது, பாகிஸ்தான்
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டார். சர்வதேச நிர்ப்பந்தத்துக்கு பாகிஸ்தான் அடிபணிந்து நடவடிக்கை எடுத்துள்ளது.