மாவட்ட செய்திகள்

பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல் + "||" + Animals can apply to become a member of the Disease Control Association Collector Sandeep Nanduri Information

பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்.
தூத்துக்குடி, 

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்ப தாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்பு சட்டம் 2001-ன் படியும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியும் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இதில் உறுப்பினராக சேர கால்நடைகள் மீது விருப்பம் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படு கிறது.

உறுப்பினர்கள் விண்ணப்பத்தில், அவர்களின் சுய விவரம் மற்றும் சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்படுவேன் என்ற உறுதிமொழி அளிக்க வேண்டும். உறுப்பினர்கள் எந்தவித அரசியல் கட்சி செயல்பாட்டிலோ, குற்ற நடவடிக்கையிலோ ஈடுபட்டவராக இருக்க கூடாது. சங்க உறுப்பினர்களுக்கு ஊதியமோ, மதிப்பூதியமோ வழங்கப்படாது.

சேர்க்கை கட்டணம் ரூ.100, ஆண்டு கட்டணம் ரூ.200, செலுத்த வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் “உதவி இயக்குனர், கால்நடை பராமரிப்பு துறை, புதுகிராமம், தூத்துக்குடி, தொலைபேசி: 0461-2322802“ என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கோவில்பட்டியில் 143 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
கோவில்பட்டியில் 143 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
2. 87 அரசு பள்ளிக்கூடங்களுக்கு செட்-டாப் பாக்ஸ் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் 87 அரசு பள்ளிக்கூடங்களுக்கு செட்-டாப் பாக்சை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
3. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி பரிசு வழங்கினார்.
4. ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு விண்ணப்பித்த 67 விசைப்படகுகளில் ஆய்வு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடியில் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு விண்ணப்பித்த 67 விசைப்படகுகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
5. தூத்துக்குடி மாவட்டத்தில் பண்ணை குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பண்ணை குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.