மாவட்ட செய்திகள்

மடிக்கணினி, கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Indian Students Union demonstrates for laptop and scholarship

மடிக்கணினி, கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மடிக்கணினி, கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மடிக்கணினி, கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பள்ளிகளில் முன்னாள் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் கல்வி உதவித்தொகை இதுவரை வழங்கவில்லை. இதையடுத்து கடந்த இரண்டு நாட்கள் முன்பாக புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்திய மாணவர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தின் அருகில் ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு வந்தனர்.


அதைத்தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தினர், பள்ளியின் முன்னாள் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் கல்வி உதவித்தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜனார்த்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி மாணவர்களின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஊதிய உயர்வு வழங்கக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊதிய உயர்வு வழங்கக்கோரி திருவாரூரில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. பிரியங்கா காந்தி கைதுக்கு கண்டனம்: நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பிரியங்கா காந்தி கைது சம்பவத்தை கண்டித்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எச்.வசந்தகுமார் எம்.பி. கலந்து கொண்டார்.
4. பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து நாகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.