மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - குடிநீர் வழங்கக்கோரி நடந்தது + "||" + Near Kallakurichi, Public road Pickets with empty pots

கள்ளக்குறிச்சி அருகே, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - குடிநீர் வழங்கக்கோரி நடந்தது

கள்ளக்குறிச்சி அருகே, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - குடிநீர் வழங்கக்கோரி நடந்தது
கள்ளக்குறிச்சி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் கிராம ஊர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதேபோல் காலனி பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து தனித்தனியாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைத்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குழாயில் இருந்து ஊர்ப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு இணைப்பு கொடுத்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் காலனி பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக காலனி பகுதியில் இருந்து ஊர் பகுதிக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் காலனி மக்கள் கூறினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலையில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தச்சூர் கைகாட்டி அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஊர்ப்பகுதிக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டிக்க வலியுறுத்தியும் குடிநீர் வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. திண்டுக்கல், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் மறியல்
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. சென்னிமலையில் குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சென்னிமலையில் குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. மணல்மேடு அருகே, நிழற்குடை அமைக்கப்படாததை கண்டித்து சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
மணல்மேடு அருகே நிழற்குடை அமைக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. கோவில் நகை திருட்டு: பூசாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் - ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
ஸ்ரீமுஷ்ணத்தில் கோவில் நகை திருடப்பட்ட சம்பவத்தில் பூசாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
5. திட்டக்குடி, கொட்டாரக்குப்பத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
திட்டக்குடி, கொட்டாரக்குப்பத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.