மாவட்ட செய்திகள்

நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 907 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது + "||" + 907 tonnes of paddy was transported from Needamangalam to Trichy

நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 907 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது

நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 907 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது
நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 907 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலம்,

விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு அரவைக்காக மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், வெளி மாவட்டத்தில் உள்ள ஆலைகளுக்கும் நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்படுகிறது.


அதன்படி நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு 907 டன் நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் ஆதனூர், தெற்குநத்தம், இடையர்நத்தம், மூவாநல்லூர் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்கள், சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் 72 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 24 பெட்டிகளில் ஏற்றினர். இதனை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் திருச்சிக்கு புறப்பட்டு சென்றது.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி அருகே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து கிளம்பிய புகையால் பரபரப்பு நடுவழியில் நிறுத்தப்பட்டது
மதுரையில் இருந்து திருச்சி வழியாக சென்னை சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து கிளம்பிய புகையால் பரபரப்பு ஏற்பட்டு ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
2. திருவாரூரில் இருந்து கன்னியாகுமரிக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
திருவாரூரில் இருந்து கன்னியாகுமரிக்கு பொது வினியோக திட்டத்திற்காக சரக்கு ரெயிலில் 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
3. நாகையில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
நாகையில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
4. தஞ்சையில் இருந்து திண்டுக்கல்லுக்கு 2,400 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
தஞ்சையில் இருந்து திண்டுக்கல்லுக்கு 2,400 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
5. திருவாரூரில் இருந்து திருவள்ளூருக்கு பொது வினியோக திட்டத்திற்காக 1,185 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது
திருவாரூரில் இருந்து திருவள்ளூருக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,185 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...