போலி ஆவணங்கள் மூலம் பணம் மோசடி விவசாயிக்கு வலைவீச்சு


போலி ஆவணங்கள் மூலம் பணம் மோசடி விவசாயிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 July 2019 3:00 AM IST (Updated: 12 July 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணங்கள் மூலம் பணம் மோசடி செய்ததாக விவசாயியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சிவகிரி, 

போலி ஆவணங்கள் மூலம் பணம் மோசடி செய்ததாக விவசாயியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

பணம் மோசடி

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தாலுகா சுப்பிரமணியபுரம் கணபதி தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 35) விவசாயி. இவருக்கு ஊரில் சிறிதளவு விவசாய நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை காண்பித்து 2006-ம் ஆண்டில் கடையநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.5.30 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை மறைத்து, இதே நிலத்தை அடமானம் வைத்து கடையநல்லூரை சேர்ந்த மதன் என்பவரிடம் 2002-ம் ஆண்டில் ரூ.2.25 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

மேலும் 2014-ம்ஆண்டில் வாசுதேவநல்லூர் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் மொத்தமாக ரூ.15.75 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகிரி சென்ட்ரல் வங்கி மேலாளர் அழகு சுப்பிரமணியன் நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமாரிடம் புகார் செய்தார்.

வலைவீச்சு

அவரது உத்தரவின் பேரில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து, முத்துச்சாமியை வலைவீசி தேடிவருகிறார்.

Next Story