உடையார்பாளையம் தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


உடையார்பாளையம் தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 11 July 2019 10:30 PM GMT (Updated: 11 July 2019 7:32 PM GMT)

கோவிலில் மகா செல்வ கணபதி, பாலசுப்பிரமணிய சாமி ஆகிய சாமிகள் தனித்தனியே சன்னதி கொண்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா செல்வ கணபதி, பாலசுப்பிரமணிய சாமி ஆகிய சாமிகள் தனித்தனியே சன்னதி கொண்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முதற்கால யாக பூஜையுடன் விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மறுநாள் 2-ம் கால யாக பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. நேற்று 3-ம் கால யாக பூஜைகள் நடைபெற்ற பின் கோவில் கலசம் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து தேவி கருமாரியம்மன், மகா செல்வ கணபதி, பாலசுப்பிரமணிய சுவாமி ஆகிய சாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருபணிக்குழுவினர், ஊர் பொதுமக்கள் மற்றும் ஸ்ரீ லெட்சுமி டிஜிட்டல் கலர் லேப் மற்றும் கே.ஆர்.டி. டி.வி.எஸ். ஆகியோர் செய்திருந்்தனர். 

Next Story