கல்லூரி அளவில் ‘ராகிங்’ தடுப்புக்குழு அமைக்கப்பட வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
கல்லூரி அளவில் ‘ராகிங்’ தொடர்பான தடுப்புக்குழு அமைக்கப்பட வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உமா மகேஸ்வரி பேசினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் ராகிங் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் அனைத்து கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் ராகிங் குறித்த நிகழ்வுகளை கண்காணிக்கும் வகையில், மாவட்ட அளவிலான குழுவில் கலெக்டர் தலைவராகவும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குழு உறுப்பினராகவும், மாவட்ட வருவாய் அதிகாரி குழுவில் உறுப்பினர் செயலராகவும் மற்றும் 3 அலுவல் சாரா உறுப்பினர்கள் இக்குழுவில் இடம் பெற்று உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்து உள்ள மருத்துவக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சம்பந்தப்பட்ட கல்லூரி நிறுவன முதல்வர் தலைமையில், பேராசிரியர் மற்றும் தொடர்புடைய கல்வி நிறுவன விடுதி காப்பாளர், அப்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு கல்லூரி அளவில் ராகிங் தொடர்பான தடுப்புக்குழு அமைக்கப்பட வேண்டும்.
புகார் பெட்டி
ராகிங் தொடர்பாக புகார்களை மாணவ, மாணவிகள் எளிதாக தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும், அனைவரும் எளிதில் பார்க்கும் பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் புகார் பெட்டி வைக்கப்பட்டு, புகார் பெட்டி வைக்கப்பட்டிருக்கும் இடம் அக்கல்வி நிறுவன தகவல் பலகையில் குறிப்பிடப்பட வேண்டும்.
இப்புகார் பெட்டியில் பெறப்படும் புகார்கள் தனியாக பதிவேட்டில் பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் விவரங்கள் தொடர்புடைய கல்லூரி முதல்வர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதன் விவரத்தினை உடனுக்குடன் மாவட்ட அளவிலான குழுவிற்கு தெரிவிக்கப்பட வேண்டும். ராகிங் தொடர்பான புகார்களை மாணவர்கள் பதிவு செய்ய ஏதுவாக இந்திய அரசின் இணையதள முகவரியான www.ant-i-r-a-g-g-i-ng.in மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 180 5522 ஆகியனவற்றை மாணவ, மாணவிகளின் அடையாள அட்டையிலும், கல்வி நிறுவன அறிவிப்பு பலகையிலும் குறிப்பிட வேண்டும்.
2 ஆண்டு சிறை தண்டனை
மாணவ, மாணவிகள் ராகிங்கில் ஈடுபட்டால் அவர்களை அக்கல்வி நிறுவனத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்படுதல், விடுதியில் இருந்து நீக்கப்படுதல் மற்றும் வழக்குப்பதிவு செய்தல் போன்ற தண்டனை விவரங்கள் மற்றும் முக்கியமாக ராகிங் குற்றங்கள் செய்த மாணவர்கள் மீது 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராத தொகையாக விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதை கல்லூரியின் தகவல் பலகையில் பெரிய எழுத்துகளில் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது ராகிங் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், அனைத்து கல்லூரி முதல்வர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story