எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பை பதிவு செய்ய ஏற்பாடு அதிகாரி தகவல்
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2018- 2019-ம் ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நடந்தது. இதில் 394 பள்ளிகளில் படித்த 13,197 மாணவர்களும், 12,529 மாணவிகளும் என மொத்தம் 25,726 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் 29-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் 12,204 மாணவர்களும், 12,072 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு முதல் கட்டமாக தற்காலிகமாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப் பட்டது.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, மத்தூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கடந்த 10-ந் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் கூறியதாவது:- எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் அசல் சான்றிதழ்களை அவர் கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வேலைவாய்ப்பு அலுவலக பதிவை பதிவு செய்பவர்கள், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை எடுத்து வந்து வேலைவாய்ப்பு பதிவினை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story