சட்டசபை தேர்தலையொட்டி மராட்டிய பா.ஜனதா செயற்குழு கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது ஜே.பி. நட்டா கலந்து கொள்கிறார்
மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது.
சட்டசபை தேர்தல்
மராட்டிய சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி உள்ளன.
இந்த நிலையில் மாநில பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 21-ந் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
பா.ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா இந்த கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இந்த தகவலை மந்திரி சுதிர் முங்கண்டிவார் நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார்.
இந்த செயற்குழு கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்தும், பிரசார திட்டம் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.
முக்கியத்துவம் வாய்ந்தது
மராட்டியத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் தலா 135 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், மீதமுள்ள 18 தொகுதிகள் இதர சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என மந்திரி சுதிர் முங்கண்டிவார் ஏற்கனவே கூறியிருந்தார். இதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாநில பா.ஜனதாவின் செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியால் பா.ஜனதா கட்சி மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளது. சட்டசபை தேர்தலில் வெற்றியை தொடர முனைப்பு காட்டி வருகிறது.
Related Tags :
Next Story