நிதியுதவி வழங்காமல் காவல்துறை காலம் கடத்தி வருகிறது - பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு


நிதியுதவி வழங்காமல் காவல்துறை காலம் கடத்தி வருகிறது - பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 July 2019 10:15 PM IST (Updated: 12 July 2019 10:15 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலைகளை தமிழகம் கொண்டுவர நிதியுதவி வழங்காமல் காவல்துறை காலம் கடத்தி வருகிறது என பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டி உள்ளார்.

சென்னை,

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பழனியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலைகளை தமிழகம் கொண்டுவர, நிதியுதவி வழங்காமல் காவல்துறை காலம் கடத்தி வருகிறது. சிலைகளை மீட்டு எடுத்து வருவது தொடர்பாக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

விரைவில் நிதி ஒதுக்கப்பட்டதும், சிலைகள் தமிழகம் கொண்டுவரப்படும். கல்லிடைக்குறிச்சியில் கடத்தப்பட்ட நடராஜர் சிலையை மீட்பதில் அரசு அலட்சியமாக இருக்கிறது. சிட்னியில் உள்ள நடராஜர் சிலையை தர அவர்கள் தயாராக இருந்தும் அரசு உதவிகளை செய்யவில்லை. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தங்களின் சொந்த பணத்தை செலவிட்டு பணி செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story