கிருஷ்ணகிரியில் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டம்
கிருஷ்ணகிரியில் அரசு டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் ராமநாதன் மற்றும் டாக்டர் கோபி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இந்த போராட்டத்தின் போது, மருத்துவ உயர்கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். உயர் கல்வி முடித்த அரசு மருத்துவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியமர்த்த வேண்டும்.
மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஏற்ப பேராசிரியர்களை நியமிப்பதை தவிர்த்து, நோயாளிகளுக்கு ஏற்ப பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story