மாவட்ட செய்திகள்

முத்துப்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் - விவசாயி சாவு + "||" + Near Muthupettai, Car collision on a motorcycle - The farmer death

முத்துப்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் - விவசாயி சாவு

முத்துப்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் - விவசாயி சாவு
முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள நத்தம் பின்னத்தூரை சேர்ந்தவர் முகமது யூசுப்(வயது 70). இவருடைய நண்பர் வேப்பஞ்சேரியை சேர்ந்த வெங்கடாசலம் (45). விவசாயிகளான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் முத்துப்பேட்டையில் இருந்து பின்னத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை வெங்கடாசலம் ஓட்டியுள்ளார். பின்னத்தூர் வளைவு அருகில் சென்றபோது பின்னால் இடும்பாவனத்தை சேர்ந்த பாலசுப்பிர மணியன்(35) என்பவர் ஓட்டிச்சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயம் அடைந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது யூசுப் பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடாசலம் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விருத்தாசலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்; வாலிபர் பலி - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. காஷ்மீரில் லாரி-கார் மோதலில் 5 பேர் சாவு
காஷ்மீரில் லாரி-கார் மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
3. மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; என்ஜினீயர் பலி
மோட்டார் சைக்கிள் - லாரி மோதியதில் என்ஜினீயர் பலியானார்.
4. லாரி மீது கார் மோதல்: வாலிபர் பலி- ஓட்டல் உரிமையாளர் படுகாயம்
சத்திரப்பட்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். நண்பரான ஓட்டல் உரிமையாளர் படுகாயம் அடைந்தார்.
5. உளுந்தூர்பேட்டை அருகே தறிகெட்டு ஓடிய கார் தடுப்புக்கட்டையில் மோதல்; தம்பதி பலி
உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்ததால் தறிகெட்டு ஓடிய கார் தடுப்புக்கட்டையில் மோதியது. இந்த விபத்தில் கணவன்-மனைவி பலியாகினர்.