மாவட்ட செய்திகள்

சாக்லெட் வாங்கி கொடுத்து சிறுமியை கடத்த முயன்ற வடமாநில வாலிபருக்கு தர்மஅடி + "||" + Trying to kidnap the little girl North State The fight of a young man

சாக்லெட் வாங்கி கொடுத்து சிறுமியை கடத்த முயன்ற வடமாநில வாலிபருக்கு தர்மஅடி

சாக்லெட் வாங்கி கொடுத்து சிறுமியை கடத்த முயன்ற வடமாநில வாலிபருக்கு தர்மஅடி
9 வயது சிறுமியை வடமாநில வாலிபர் ஒருவர் சாக்லெட் வாங்கி கொடுத்து அங்குள்ள துறைமுகம் குடியிருப்பு அரசு பள்ளி அருகே அழைத்துச் சென்றார்.
பெரம்பூர்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமியை வடமாநில வாலிபர் ஒருவர் சாக்லெட் வாங்கி கொடுத்து அங்குள்ள துறைமுகம் குடியிருப்பு அரசு பள்ளி அருகே அழைத்துச் சென்றார். அவர் மீது சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள், வாலிபரை பிடித்து விசாரித்தனர்.


அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், தர்மஅடி கொடுத்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த லிப்புதாஸ் (வயது 35) என்பதும், அந்த பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருவதும், அந்த சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து கடத்த முயன்றதும் தெரிந்தது.

இதற்கிடையில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். அவர்களுக்கு சிறுமி மீட்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்த முயன்ற லிப்புதாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 16 வயது சிறுமியை 2-வதாக திருமணம் செய்ய முயன்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
விராலிமலை அருகே 16 வயது சிறுமியை 2-வதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமணம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.