மாவட்ட செய்திகள்

கடலூரில், நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார் + "||" + In Cuddalore, Emphasizing the protection of water bodies Awareness rally

கடலூரில், நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்

கடலூரில், நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்
கடலூரில் நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அன்புசெல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கடலூர், 

ஜல் சக்தி அபியான் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் படி நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகி றது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் பாரம்பரிய நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு, ஆழ்துளை கிணறுகளை மறுசீரமைக்க வேண்டும். நீர் நிலை மேலாண்மை, மரக்கன்றுகள் வளர்த்தல், பசுமை காடுகளை உருவாக்குதல் குறித்து விழிப்புணர்வு பேரணி கடலூர் உண்ணாமலை செட்டிச்சாவடி அய்யனார்கோவில் அருகில் நடந்தது.

பேரணியை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சி.கே. என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இந்த பேரணி சாவடி மெயின்ரோடு வழியாக தென்பெண்ணையாறு அருகே உள்ள அக்‌‌ஷரா வித்யாஸ்ரம் பள்ளி அருகில் முடிவடைந்தது.

முன்னதாக இந்த பேரணியில் சி.கே. என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். மரக்கன்றுகள் நட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், கோ‌‌ஷங்களை எழுப்பியபடியும் பேரணியாக சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி துண்டுபிரசுரத்தையும் கலெக்டர் அன்புசெல்வன் அப்பகுதி மக்களிடம் வழங்கினார். பேரணியில் சி.கே.கல்லூரி அலுவலக அதிகாரி சீனுவாசன், தூய்மை பாரத இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சிவா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரு‌‌ஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியன், அலுவலக மேற்பார்வையாளர் கல்யாணி மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்கள், சி.கே.கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - கலெக்டர் அன்புசெல்வன் வேண்டுகோள்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கடலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியில் கலெக்டர் அன்புசெல்வன் வேண்டுகோள் விடுத்தார்.
2. கடலூரில் உலக மன நல விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்
உலக மன நல தினத்தை யொட்டி கடலூரில் நடந்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அன்புசெல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
3. கடலூர், வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. கடலூர், வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5. தடையில்லா சான்று பெறாமல் நீர்நிலைகளில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது - அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
தடையில்லா சான்று பெறாமல் நீர்நிலைகளில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...