மாவட்ட செய்திகள்

கோவையில் வாகன சோதனை, மதுபோதையில் போலீசாருடன் தகராறு செய்த வாலிபர்கள் - சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோவால் பரபரப்பு + "||" + Vehicle Testing, The police with alcohol addiction youth who dispute

கோவையில் வாகன சோதனை, மதுபோதையில் போலீசாருடன் தகராறு செய்த வாலிபர்கள் - சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோவால் பரபரப்பு

கோவையில் வாகன சோதனை, மதுபோதையில் போலீசாருடன் தகராறு செய்த வாலிபர்கள் - சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோவால் பரபரப்பு
கோவையில் வாகன சோதனை செய்த போலீசாருடன் மதுபோதையில் 2 வாலிபர்கள் தகராறு செய்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வைரலானது.
இடிகரை,

கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே நேற்றுமுன்தினம் காலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், கார்களில் சீட் பெல்ட் போடாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர். அவர்களை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினார்கள்.

உடனே அந்த 2 பேரும் மோட்டார் சைக்கிளை திருப்பி எதிர் திசையில் செல்ல முயன்றனர். அந்த சமயத்தில் எதிரில் வாகனங்கள் வந்ததால் தடுமாறிய அவர்கள் 2 பேரும் சாலையில் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர். உடனே அவர்களை நோக்கி போக்குவரத்து போலீசார் ஓடி வந்தனர்.

போலீசாரை பார்த்ததும் சாலையில் விழுந்தவர்கள் எழுந்திருக்காமல் சாலையின் குறுக்கே படுத்து உருண்டனர். போக்குவரத்து நிறைந்த கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்கள் வேகமாக வந்தன. சாலையின் நடுவில் 2 பேர் படுத்து கிடப்பதை பார்த்ததும் வாகனங்களில் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து வாகனத்தை நிறுத்தி வேறு பக்கமாக திருப்பி சென்றனர். இது தெரியாத சில வாகன ஓட்டிகள் அருகில் வந்து பிரேக் போட்டு வேறு பக்கம் திருப்பி சென்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே அவர்களை எழுந்திருக்குமாறு போலீசார் கூறினார்கள். ஆனால் எழுந்திருக்காமல் சாலையிலேயே படுத்திருந்தனர். சிறிது நேரம் படுத்து கிடந்த அவர்கள் அதன்பின்னர் எழுந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். எல்லா வாகன ஓட்டிகளையும் நிறுத்தி சோதனை நடத்தாமல் எங்களை மட்டும் நிறுத்தி சோதனையிடுவது ஏன்? என்று கேட்டு போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்கள் 2 பேரும் மதுபோதையில் இருந்ததால் மோட்டார் சைக்கிளை வாங்கி வைத்துக் கொண்டு அவர்களை திருப்பி அனுப்பினார்கள். அப்படியிருந்தும் அவர்கள் செல்லாமல் போக்குவரத்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர்.

சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே நடந்த இந்த பரபரப்பான சம்பவத்தை அந்த வழியாக வந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளத்தில் பரவ விட்டனர். 2 பேரும் சாலையில் உருண்டு புரள்வதும், வாகனங்கள் வேகமாக அவர்கள் அருகில் வந்து திரும்பி செல்லும் காட்சிகள் வைரலாக பரவியது.

விசாரணையில் அவர்கள் மூர்த்தி (வயது 34) மற்றும் பழனிசாமி (33) என்றும் சிவானந்தகாலனி பகுதியில் அறை எடுத்து தங்கியிருப்பதும் தெரியவந்தது. அவர்களில் மூர்த்தி புரோட்டா மாஸ்டராகவும், பழனிசாமி ஏ.சி. மெக்கானிக்காகவும் வேலை செய்து வருகின்றனர்.

2 பேர் மீதும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சாலையில் கலாட்டா செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் மோட்டார்சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில் வாலிபர் சாவு
வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில், தடுமாறி விழுந்த வாலிபர் பலியானார். இது தொடர்பாக போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. சங்கராபுரம் அருகே, வாகன சோதனையில் ரூ.18¼ லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
சங்கராபுரம் அருகே வாகன சோதனையில் ரூ.18¼ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
3. வாகன சோதனையில் பிடிபட்ட நகைகளில் 7 கிலோ தங்கத்துக்கு உரிய ஆவணம் இல்லை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்
வாகன சோதனையில் இதுவரை பிடிபட்ட நகைகளில் 7 கிலோ தங்கம், 52 கிலோ வெள்ளிக்கு உரிய ஆவணம் இல்லாததால் திருப்பி ஒப்படைக்கப்படாமல் உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
4. தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை, மதுவிற்றவர் கைது - 27 மதுபாட்டில்கள் பறிமுதல்
செங்கிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் மதுவிற்றவரை கைது செய்து, அவரிடம் இருந்த 27 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
5. புவனகிரி அருகே, வாகன சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
புவனகிரி அருகே நடந்த வாகன சோதனையில் ரூ.4 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...