மாவட்ட செய்திகள்

கோரேகாவில் சாக்கடையில் விழுந்து மாயமானசிறுவனை தேடும் பணி தீவிரம் + "||" + Gorega falls into the sewer and is magical The intensity of work the boy is looking for

கோரேகாவில் சாக்கடையில் விழுந்து மாயமானசிறுவனை தேடும் பணி தீவிரம்

கோரேகாவில் சாக்கடையில் விழுந்து மாயமானசிறுவனை தேடும் பணி தீவிரம்
கோரேகாவில் சாக்கடையில் விழுந்து மாயமான சிறுவனை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடந்தது.
மும்பை,

கோரேகாவில் சாக்கடையில் விழுந்து மாயமான சிறுவனை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடந்தது.

சாக்கடையில் விழுந்த சிறுவன்

மும்பை கோரேகாவ் கிழக்கு அம்பேத்கர் சவுக் பகுதியை சேர்ந்தவர் சூரஜ் சிங். இவரது மனைவி சந்தியா.

இவர்களுக்கு சோனாலி என்ற மகளும், சித்தாந்த், திவ்யான்ஷ் ஆகிய 2 மகன்களும் உண்டு. 3 வயதான திவ்யான்ஷ் கடந்த 10-ந் தேதி இரவு அங்கு திறந்து கிடந்த சாக்கடைக்குள் விழுந்து விட்டான். நெஞ்சை பதற செய்யும் இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

சிறுவன் கழிவுநீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர், மாநகராட்சி மீட்பு குழு, போலீஸ் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாக்கடை கால்வாய்களை தோண்டியும் பார்க்கப்பட்டது.

2-வது நாளாக தேடல்

ஆனால் நேற்று முன்தினம் முழுவதும் தேடிப்பார்த்தும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்தது. மீட்பு குழுவினர் அங்குள்ள பெரிய சாக்கடை கால்வாயில் இறங்கியும் தேடினர். ஆயினும் மாலை வரையிலும் மீட்க முடியவில்லை.

இதுபற்றி மீட்பு குழுவை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுவனின் உடலை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்றார்.