ரசீது இன்றி உணவுப்பொருள் வாங்க வேண்டாம் பயணிகளிடம் மத்திய ரெயில்வே விழிப்புணர்வு பிரசாரம்


ரசீது இன்றி உணவுப்பொருள் வாங்க வேண்டாம் பயணிகளிடம் மத்திய ரெயில்வே விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 13 July 2019 4:30 AM IST (Updated: 13 July 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

ரசீது இன்றி உணவுப்பொருள் வாங்க வேண்டாம் என பயணிகளிடம் மத்திய ரெயில்வே விழிப்புணர்வு பிரசாரம் செய்தது.

மும்பை,

ரசீது இன்றி உணவுப்பொருள் வாங்க வேண்டாம் என பயணிகளிடம் மத்திய ரெயில்வே விழிப்புணர்வு பிரசாரம் செய்தது.

விழிப்புணர்வு பிரசாரம்

ரெயில்நிலையங்களில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பயணிகளிடம் இருந்து அதிகளவில் புகார்கள் வந்தன. இதையடுத்து ரெயில்நிலையம், ரெயில்களில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள், பிளாட்பார கடைக்காரர்கள் ஆகியோர் பயணிகள் வாங்கும் பொருட்களுக்கு கட்டாயம் ரசீது கொடுக்க வேண் டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து மத்திய ரெயில்வே, பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2-ந்தேதி முதல் 11-ந் தேதி வரை ‘‘ரசீது இல்லை, பணமில்லை'' பிரசாரத்தை செய்தது. இதன்படி மத்திய ரெயில்வே ‘‘ரசீது தரப்படாத உணவுப்பொருட்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்'', ‘‘ரசீது இல்லாமல் வாங்கினால் உணவு இலவசம்’’ போன்ற பதாகைகள், சுவரொட்டிகளை ரெயில்நிலையங்களில் வைத்து உள்ளது.

இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் போது பயணிகள் தங்கள் உணவுப்பொருளுக்கான பணத்தை டிஜிட் டல் முறையில் செலுத்த மத்திய ரெயில்வே அறிவுறுத் தியது.

ஆன்-லைனில் பணம்

இந்த விழிப்புணர்வு பிரசார முகாம் குறித்து மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் உதாசி கூறுகையில், ‘‘பயணிகளிடம் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைளை எடுத்து உள்ளாம். மேலும் ரெயில்நிலைய பிளாட்பார கடைகளிலும் அதிரடி சோதனைகள் நடத்தி வருகிறோம்.

பயணிகள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஆன்-லைன் பேங்கிங், ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு, பேடிஎம், கூகுல்பே, போன்பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்'' என்றார்.

Next Story