ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2019 10:00 PM GMT (Updated: 12 July 2019 10:41 PM GMT)

ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே தொடங்கக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி, 

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள போக்குவரத்துக்கழக புறநகர் கிளை வளாகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் தொ.மு.ச. பொதுச்செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். இதில் தொ.மு.ச. பழனிசாமி, கருணாநிதி, ஏ.ஐ.டி.யு.சி. மணி, சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் கருணாநிதி, எச்.எம்.எஸ். செல்வம், ஐ.என்.டி.யு.சி. சின்னப்பன் உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

14-வது ஊதிய ஒப்பந்தத்தை வருகிற செப்டம்பர் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்.

காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கலெக்‌ஷன், டீசல் என காரணங்களை கூறி தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் நிர்வாகத்தை கண்டிப்பது, நிர்வாகத்தில் வரவுக்கும், செலவுக்கு உள்ள வித்தியாச தொகையை வருகிற பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story