நூறுநாள் வேலை பணியாளர்கள் சம்பளம் கேட்டு சாலை மறியல்


நூறுநாள் வேலை பணியாளர்கள் சம்பளம் கேட்டு சாலை மறியல்
x
தினத்தந்தி 13 July 2019 10:45 PM GMT (Updated: 13 July 2019 6:28 PM GMT)

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுள்ளங்குடி கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் அந்த கிராமத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுள்ளங்குடி கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் அந்த கிராமத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வேலைக்கான உத்தரவு இல்லாமலே வேலை நடைபெற்றதாக தெரிகிறது. நேற்று வேலை நடைபெற்ற போது, பணியாளர்களிடம் பணித்தள பொறுப்பாளர் கையெழுத்து பெற்றபோது நேற்றைய தேதிக்கு மட்டும் கையெழுத்து போட சொல்லியுள்ளார். அப்போது, ஏற்கனவே 2 நாட்கள் செய்த வேலைக்கு ஏன் கையெழுத்து பெறவில்லை என பணியாளர்கள் கேட்கையில், வேலைக்கான உத்தரவு இல்லாமல் வேலை செய்யப்பட்டது. எனவே அதற்கு கூலி இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த பணியாளர்கள் வேலை செய்த 2 நாட்கள் சம்பளத்தை தர வலியுறுத்தி ஏலாக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் மற்றும் திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து கேட்டறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர் மற்றும் பணித்தள பொறுப்பாளரை கடுமையாக கண்டித்தார். பின் பொதுமக்களிடம் அந்த 2 நாட்களுக்கான சம்பளம் கண்டிப்பாக கொடுக்கப்படும் என உத்தரவு அளித்ததையடுத்து பொதுமக்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

Next Story