ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம்
திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி திருக்குறளம் என்ற ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் சிறிய அளவில் தண்ணீர் இருந்ததால் அதிகளவில் மீன்கள் இருந்தன.
வி.கைகாட்டி,
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள விளாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட விளாங்குடி கிராமத்தில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி திருக்குறளம் என்ற ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் சிறிய அளவில் தண்ணீர் இருந்ததால் அதிகளவில் மீன்கள் இருந்தன.இதன் அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள கழிவு நீரை இந்த ஏரியில் விடப்பட்டன. இந் நிலையில் இந்த ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் நேற்று மர்மமான முறையில் செத்து மிதந்தன. இதனால் ஏரியில் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சாலைகளில் செல்வோர் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரியை சுத்தப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story