மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் அணிவது குறித்து துண்டு பிரசுரம் வினியோகம் + "||" + Distribution of leaflets on the wearing of helmets

ஹெல்மெட் அணிவது குறித்து துண்டு பிரசுரம் வினியோகம்

ஹெல்மெட் அணிவது குறித்து துண்டு பிரசுரம் வினியோகம்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பஸ் நிலைய பகுதியில் காவல்துறை சார்பில், ஹெல்மெட் அணிவது குறித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பஸ் நிலைய பகுதியில் காவல்துறை சார்பில், ஹெல்மெட் அணிவது குறித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு லட்டு கொடுத்தும், ஹெல்மெட் அணியாமல் வந்தவருக்கு எமன் கயிறு கட்டி இழுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், மாயழகு உள்ளிட்ட போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.