மாவட்ட செய்திகள்

வரி வருவாயில் மாநில அரசுகளுக்கான பங்கில் 9 சதவீதத்தை குறைக்கிறது மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு + "||" + P Chidambaram alleges central government reduces state governments' share of tax revenues by 9 percent

வரி வருவாயில் மாநில அரசுகளுக்கான பங்கில் 9 சதவீதத்தை குறைக்கிறது மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

வரி வருவாயில் மாநில அரசுகளுக்கான பங்கில் 9 சதவீதத்தை குறைக்கிறது மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
வரி வருவாயில் மாநில அரசுகளுக்கான பங்கில் 9 சதவீதத்தை மத்திய அரசு குறைப்பதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
திருச்சி,

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2019-2020-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பற்றிய கலந்தாய்வு திருச்சியில் நேற்று ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது. இதில் சிறப்புவிருந்தினராக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பட்ஜெட்டை ஒப்பிட்டு அவர் பேசியதாவது:-


மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருந்த போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் மறுநாளே அந்த பேச்சு அடிபட்டு விட்டது. கடந்த 2018-2019-ம் நிதி ஆண்டில் பொருளாதாரம் மந்த கதியில் இருந்தது. இதை மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தியாவில் ஆண்டுக்கு 10 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதனை கண்டுகொள்ளவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் வேலையின்மை அதிகரித்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது வேலைவாய்ப்பு இல்லாமை 7.8 சதவீதமாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 4 கோடியே 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். சேமிப்பு பற்றி இந்த பட்ஜெட்டில் எந்த ஊக்கமும் கொடுக்கவில்லை. சேமிப்பில் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது. பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட அச்சத்தில் இருந்து இந்தியா இன்னும் மீளவில்லை.

இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவோம் என அறிவித்துள்ளது கவர்ச்சிகரமாக தான் உள்ளது. நிதி கமிஷனின் அறிக்கையின் படி மத்திய அரசின் வரி வருமானத்தில் 42 சத வீதம் மாநில அரசுக்கு பங்களிப்பு தர வேண்டும். ஆனால் மாநில அரசுகளுக்கு 9 சதவீத பங்கு தொகை குறைய போகிறது. இதனை மாநில அரசுகள் கண்டிக்க வேண்டும், குரல் எழுப்ப வேண்டும். நான் கூறுகிற கணக்கினை மாநில முதல்-அமைச்சர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதில் பிழை இருந்தால் திருத்தி கொள்கிறேன்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் இல்லை. நடுத்தர மக்கள் அவ்வப்போது பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கு சுங்க வரியை உயர்த்தி உள்ளனர். பெட்ரோல், டீசல் மின்சாரம், ஆல்கஹால் போன்றவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. விவசாயத்தில் ஜீரோ பட்ஜெட் என்பது விவசாய இடுபொருட்கள் இல்லாமல் செய்யும் திட்டம் தான். இது செலவில்லாத விவசாயம் என்பது இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் கட்சித்தாவல் சட்டம் பாயாமல் அடைக்கலமாக உள்ளது - ப.சிதம்பரம் பேச்சு
கட்சித்தாவல் சட்டம் பாயாமல் அடைக்கலமாக உள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.
2. பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடலை பாடி ப.சிதம்பரம் புகழ்ந்தார்
பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடலை பாடி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புகழ்ந்தார்.
3. மனித கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? - ப.சிதம்பரம்
மனித கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
4. கர்நாடக அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பா.ஜ.க.; மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பா.ஜ.க. உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
5. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் அமெரிக்கா விரோதத்தோடுதான் உள்ளது : வடகொரியா குற்றச்சாட்டு
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் அமெரிக்கா விரோதத்தோடுதான் இருக்கிறது என வடகொரியா பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...