மாவட்ட செய்திகள்

மாணவ, மாணவிகள்படித்த பள்ளிகள் மூலம் வேலைவாய்ப்பை பதிவு செய்யலாம்கலெக்டர் பிரபாகர் தகவல் + "||" + Student, students Employment may be registered through educated schools Collector Prabhakar Information

மாணவ, மாணவிகள்படித்த பள்ளிகள் மூலம் வேலைவாய்ப்பை பதிவு செய்யலாம்கலெக்டர் பிரபாகர் தகவல்

மாணவ, மாணவிகள்படித்த பள்ளிகள் மூலம் வேலைவாய்ப்பை பதிவு செய்யலாம்கலெக்டர் பிரபாகர் தகவல்
மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலம் நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவை பதிவு செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியினை தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக 2011-ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து, அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வராமல் நேரடியாக இந்த துறையின் இணையதளம் மூலமாக பதிவு செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் தவிர்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தற்போது 2019-ம் ஆண்டிற்கான 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் கடந்த 10-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதையொட்டி வருகிற 24-ந் தேதி வரை ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் படித்த பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இவ்வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்.

மேலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத்துறையின் இணையதளத்தில் www.tnv-e-l-a-iv-a-a-i-ppu.gov.in ஆன்லைனில் பதிவு செய்யலாம். அல்லது அவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யும் போது, தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம். எனவே, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை