தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1000 வழக்குகளுக்கு சமரச தீர்வு
புதுவையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1000 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரி,
புதுவை மாநில சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. புதுவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த இந்த மக்கள் நீதிமன்றத்தை தலைமை நீதிபதி தனபால் தொடங்கிவைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியில் புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் சோபனாதேவி, நீதிபதிகள் சுபா அன்புமணி, தாமோதரன், ராபர்ட் கென்னடி ரமேஷ், வக்கீல் சங்க தலைவர் முத்துவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் புதுச்சேரியில் நீதிமன்ற வளாகத்தில் 8 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வும், காரைக்கால், மாகி, ஏனாமில் தலா ஒரு அமர்வும் அமைக்கப்பட்டிருந்தது.
இதில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நேரடி வழக்குகள் என 6 ஆயிரத்து 868 வழக்குகள் தீர்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் 1,053 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் 887 வழக்குகள் ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஆகும். மொத்தம் ரூ.5 கோடியே 57 லட்சத்து 86 ஆயிரத்து 763-க்கு சமரச தீர்வுகள் காணப்பட்டது.

Related Tags :
Next Story