கோவையில் குற்றச்செயல்களை தடுக்க மாதந்தோறும் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தகவல்


கோவையில் குற்றச்செயல்களை தடுக்க மாதந்தோறும் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தகவல்
x
தினத்தந்தி 13 July 2019 9:35 PM GMT (Updated: 13 July 2019 9:35 PM GMT)

கோவை மாநகரில் குற்றச் செயல்களை தடுக்க மாதந்தோறும் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று போலீஸ் கமிஷனர் சுமித்சரண் கூறினார்.

கோவை,

கோவை காந்திபுரம் காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட 100 அடி சாலை, பாரதியார் சாலை, ஆவாரம்பாளையம் ரோடு, வி.கே. கே.மேனன் சாலை ஆகிய பகுதிகளில் 200 கண்காணிப்பு கேமராக்கள் தனியார் பங்களிப்புடன் அமைக் கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா காட்டூர் போலீஸ் நிலையத்தில் நேற்று காலை நடந்தது. இதில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கலந்துகொண்டு புதிய கேமராக்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் துல்லியமானவை. முன்றாம் கண் என்று அழைக்கப்படும் இந்த கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக் கப்பட்டு உள்ளது. இதன் கட்டுப்பாட்டு அறை காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் அருகே புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 7 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை 4,500 கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்துள்ளோம். கோவை மாநகரில் ஒவ்வொரு மாதமும் 50 கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றச்செயல்களை தடுப்பதில் கண்காணிப்பு கேமராக் கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோவை மாநகருக்குள் வரும் ஒரு நபர் இரு சக்கர வாகனத்திலோ, நடந்து சென்றாலோ அவருடைய உருவம் குறைந்தபட்சம் 4 கேமராக்களில் பதிவாகி விடும். எனவே கேமராவின் பார்வையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன், தலைமையிட துணை கமிஷனர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story