சித்தராமையா, குமாரசாமியின் சமாதான முயற்சி வெற்றி: ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுகிறார், எம்.டி.பி. நாகராஜ்


சித்தராமையா, குமாரசாமியின் சமாதான முயற்சி வெற்றி: ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுகிறார், எம்.டி.பி. நாகராஜ்
x
தினத்தந்தி 13 July 2019 10:00 PM GMT (Updated: 13 July 2019 9:45 PM GMT)

முதல்-மந்திரி குமாரசாமியின் மந்திரி சபையில் வீட்டு வசதித்துறை மந்திரியாக செயல்பட்டு வருபவர் எம்.டி.பி.நாகராஜ். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

பெங்களூரு, 

முதல்-மந்திரி குமாரசாமியின் மந்திரி சபையில் வீட்டு வசதித்துறை மந்திரியாக செயல்பட்டு வருபவர் எம்.டி.பி.நாகராஜ். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 5 மணி முதல் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரும், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவும் எம்.டி.பி. நாகராஜை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். சித்தராமையாவின் காவேரி இல்லத்தில் வைத்து நேற்று இரவும் எம்.டி.பி.நாகராஜை முதல்-மந்திரி குமாரசாமி, மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டவர்கள் சமாதானம் செய்தனர். இதையடுத்து எம்.டி.பி. நாகராஜ் சமாதானம் அடைந்தார். பின்னர் அவர் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நானும், சுதாகரும் சேர்ந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தோம். முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் என்னை சமாதானப்படுத்தினர். காங்கிரஸ் கட்சியில் இருக்க வேண்டும். ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். நானும், சுதாகரும் ஒரே கட்சியில் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறோம். நான் காங்கிரசில் தொடர விரும்புகிறேன். இதனால் சுதாகரும் சமாதானம் அடைந்து காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவார். நானும், சுதாகரும் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவோம். சுதாகரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. நாளை (அதாவது இன்று) மதியத்துக்குள் அவரை தொடர்பு கொண்டு பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story