காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டுக்கு சென்ற முதல்-மந்திரி பட்னாவிஸ் மராட்டிய அரசியலில் பரபரப்பு


காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டுக்கு சென்ற முதல்-மந்திரி பட்னாவிஸ் மராட்டிய அரசியலில் பரபரப்பு
x
தினத்தந்தி 14 July 2019 4:30 AM IST (Updated: 14 July 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாரத் பால்கே வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாரத் பால்கே வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் பிரசித்தி பெற்ற பண்டர்பூர் விட்டல்சாமி கோவிலில் நடந்த ஆஷாடி ஏகாதசி திருவிழாவில் கலந்து கொண்டார். இதன்பிறகு அவர் அந்த பகுதியில் உள்ள பண்டர்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பாரத் பால்கே வீட்டுக்கு சென்றார். அப்போது முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், எம்.எல்.ஏ. வீட்டில் நடந்த பூஜையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பாரத் பால்கே பா.ஜனதா தலைவர்களுடன் நெருக்கமாக உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் ஆவார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அவர் பா.ஜனதாவில் சேருவார் என்று கூறப்படுகிறது. அவருக்கு பா.ஜனதா சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பாரத் பால்கேவுடன் பேசியதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டுக்கு முதல்-மந்திரி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் 2 பேர்

இவர் தவிர காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயகுமார் கோரே (மான் தொகுதி), கோபால்தாஸ் அகர்வால் (கோண்டியா) ஆகியோரும் பா.ஜனதா தலைவர்களுடன் நெருக்கமாக உள்ளனர். அவர்களை இழுக்கவும் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.

Next Story