ஆன்லைன் மூலம் மதுபானம் வாங்க முயன்ற 2 பெண்களிடம் பணம் அபேஸ் மர்மநபர்களுக்கு வலைவீச்சு
ஆன்லைன் மூலம் மதுபானம் வாங்க முயன்ற 2 பெண்களிடம் பணம் அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மும்பை,
ஆன்லைன் மூலம் மதுபானம் வாங்க முயன்ற 2 பெண்களிடம் பணம் அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆன்லைனில் மதுபானம்
மும்பை தார்டுதேவ் பகுதியில் வசித்து வரும் 32 வயது பெண் ஒருவர் பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சி செய்தார். அப்போது பெண்ணுக்கு இணையதளத்தில், மதுபானம் வீட்டுக்கு டெலிவிரி செய்யும் வசதி இருப்பதாக ஒரு மதுக்கடையின் தொடர்பு எண் கிடைத்தது. பெண் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது எதிர்முனையில் பேசிய நபர் மதுபானம் ரூ.2 ஆயிரம் எனவும், அதற்கான பணத்தை ஆன்லைன் மூலம் பெற பெண்ணின் ஏ.டி.எம். கார்டு விவரங்கள், ஒ.டி.பி. எண்ணை கேட்டார். பெண்ணும் மதுபானம் வீடு தேடி வரும் என நினைத்து விவரங்களை கூறினார்.
பணம் அபேஸ்
இந்தநிலையில் போனில் பேசிய ஆசாமி பெண் கூறிய விவரங்களை வைத்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.45 ஆயிரத்தை அபேஸ் செய்தார்.
இதேபாணியில் மர்ம ஆசாமிகள் ஆன்லைனில் மதுபானம் வாங்க முயன்ற பிரபாதேவியை சேர்ந்த 30 வயது பெண்ணிடமும் ரூ.8 ஆயிரத்து 500-ஐ அபேஸ் செய்து இருந்தனர். இந்த 2 மோசடி சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்வது இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொது மக்கள் ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சி செய்து ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story