அரியலூர்- பெரம்பலூரில் ‘திடீர்’ மழை


அரியலூர்- பெரம்பலூரில் ‘திடீர்’ மழை
x
தினத்தந்தி 14 July 2019 10:45 PM GMT (Updated: 14 July 2019 6:04 PM GMT)

அரியலூரில் நேற்று மாலை 5.30 மணியளவில் இடி, மின்னலுடன் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1½ மணி நேரம் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இந்நிலையில் அரியலூரில் நேற்று மாலை 5.30 மணியளவில் இடி, மின்னலுடன் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1½ மணி நேரம் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. திடீரென பெய்த மழையால் அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் நேற்று நடந்த வாரச்சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. சில வீடுகளில் மழைநீர் புகுந்தது. நேற்று பெய்த மழையால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் பெரம்பலூரில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை 6.25 மணியளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. தூறலுடன் ஆரம்பித்த மழை சிறிது நேரம் பலத்த மழையாக தொடர்ந்து பெய்தது. இதனால் மழைநீர் சாலையில் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கின.

Next Story