நெல்லை அரசு பொருட்காட்சியில் குவிந்த பொதுமக்கள்
நெல்லை அரசு பொருட்காட்சியில் பொதுமக்கள் நேற்று குவிந்தனர்.
நெல்லை,
நெல்லை அரசு பொருட்காட்சியில் பொதுமக்கள் நேற்று குவிந்தனர்.
அரசு பொருட்காட்சி
நெல்லை மாநகராட்சி பொருட்காட்சி திடலில் அரசு பொருட்காட்சி கடந்த 15-ந் தேதி தொடங்கியது. நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பள்ளி கல்வித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, வனத்துறை உள்ளிட்ட 28 துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இது தவிர அரசின் சார்பு நிறுவனமான ஆவின், குடிநீர் வடிகால் வாரியம், அரசு மகளிர் மேம்பாட்டு திட்டம், நெல்லை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அரசு துறை அரங்குகளில் ஒவ்வொரு துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் இடம் பெற்று இருந்தன.
கூட்டம் அலை மோதியது
இந்த பொருட்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்விக்கும் வகையில் ராட்டினங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி அரசு பொருட்காட்சியில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து இருந்தனர். அரங்குகள் முன்பு அமைக்கப்பட்டு இருந்த கவுண்டர்களில் வரிசையான நின்று பொதுமக்கள் டிக்கெட் வாங்கி சென்றனர். அவர்கள், ஒவ்வொரு அரங்குகளையும் பார்த்து ரசித்தனர். அங்கு நடந்த கலைநிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு களித்தனர்.
தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இருந்தாலும் நெல்லை சந்திப்பில் இருந்து நெல்லையப்பர் கோவில் செல்லும் எஸ்.என்.ஹைரோட்டில் நேற்று காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டமும், போக்குவரத்து நெருக்கடியுமாகவே காணப்பட்டது.
Related Tags :
Next Story