இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 July 2019 10:45 PM GMT (Updated: 14 July 2019 6:39 PM GMT)

புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணியினர் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள சின்னப்பா பூங்காவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணியினர் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள சின்னப்பா பூங்காவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார்.

நகர தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் பா.ஜ.க. மாநில செயலாளர் கவிதாசன், மாநில அமைப்பாளர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினர்.

கோவில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பள்ளிவாசல், கிறிஸ்தவ ஆலயங்களிலும் அறநிலையத்துறை தலையிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காசு கொடுத்து தரிசனம் செய்ய கடவுள் என்ன காட்சி பொருளா என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் இந்து முன்னணியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story