நெல்லை அருகே பெண் வெட்டிக்கொலை கணவர் கைது
நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கூலி தொழிலாளி
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் ஜே.ஜே.நகரை சேர்ந்த ஆயிரத்தான் மகன் மகராஜன் (வயது 37). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி (35). இவர்களுக்கு மகேஷ்ராஜா (11), ஆனந்தராஜா (10) என்ற 2 மகன்கள் உள்ளனர். மகராஜனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டாம். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகராஜன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து செல்வியை வெட்டியதாக கூறப்படுகிறது.
வெட்டிக்கொலை
இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அங்கிருந்து மகராஜன் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், செல்வியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் மகராஜனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story