கேளம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது


கேளம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 July 2019 3:45 AM IST (Updated: 15 July 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

கேளம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 40). திருமணம் ஆகாதவர். மூட்டை தூக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் கேளம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது நண்பர்களான சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த அரிஷ்குமார் (22), கேளம்பாக்கத்தை அடுத்த சாத்தாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரேவந்த் (21) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அருள், அவர்களிடம் மது பாட்டில், கஞ்சா போன்றவற்றை வாங்கி கொடுக்கும்படி தொந்தரவு செய்ததால் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் வரவழைத்து கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

அரிஷ்குமார் மீது துரைப்பாக்கம், கண்ணகி நகர், திருப்போரூர், மாமல்லபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீசார் அரிஷ்குமார், ரேவந்த் ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story