வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 15 July 2019 3:30 AM IST (Updated: 15 July 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நேற்று ஆனித்திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வாசுதேவநல்லூர்,

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நேற்று ஆனித்திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தேரோட்டம்

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணி நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனித்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் மற்றும் பக்தி சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான நேற்று காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமி எழுந்தருளினார். தேரோட்ட மண்டகப்படிதாரரான வாசுதேவநல்லூர் தொழில் அதிபர் எஸ்.தங்கப்பழம் குடும்பத்தினரால் தேர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மதியம் 1.40 மணிக்கு மனோகரன் எம்.எல்.ஏ. வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பஞ்சவாத்தியங்கள் முழங்க கோவில் முன்பிருந்து தேர் புறப்பட்டு, நான்கு ரதவீதிகள் வழியாக சென்று மாலை 3.10 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

தெப்பத்திருவிழா

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், தக்கார் யக்ஞ நாராயணன், ஆய்வாளர் கணேஷ் வைத்திலிங்கம், செயல் அலுவலர் சதீஷ், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி கமிட்டி தலைவர் தவமணி, வட்டார அட்மா தலைவர் மூர்த்தி பாண்டியன், முருகேசன் மற்றும் அனைத்து சமுதாய மண்டகப்படிதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கலா (வாசுதேவநல்லூர்), சுரேஷ்குமார் (சிவகிரி), பாலசுந்தரம் (புளியங்குடி) மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. இதையொட்டி சிறப்பு வாணவேடிக்கைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Next Story