காட்கோபரில் பெற்றோர் கண்முன்னால் வாலிபர் அடித்து கொலை நண்பர்கள் 2 பேர் கைது
காட்கோபரில் பெற்றோர் கண்முன்னால் வாலிபரை அடித்துக் கொன்ற அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
காட்கோபரில் பெற்றோர் கண்முன்னால் வாலிபரை அடித்துக் கொன்ற அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர்
மும்பை காட்கோபர் அசல்பா பகுதியை சேர்ந்தவர் அஸ்வினிகுமார்(வயது24). வேலை இல்லாமல் இருந்து வந்த இவர், தன்னை ஏதாவது வேலையில் சேர்த்து விடும்படி அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் நரேந்திர ரானே(31), ராகுல் ராவுத்(30) ஆகியோரிடம் கேட்டு உள்ளார். அவரை நரேந்திர ரானே ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அஸ்வினிகுமார் முதல் மாத சம்பளத்தை வாங்கியிருக்கிறார். அதை தனது சொந்த செலவுக்கு வைத்துக்கொண்ட அவர், பெற்றோரிடம் தனக்கு சம்பளம் கிடைக்கவில்லை என பொய் சொல்லி இருக்கிறார்.
இது தொடர்பாக அவரது பெற்றோர் நரேந்திர ரானேயிடம் கேட்டனர். உடனே அவர் ராகுல் ராவுத்துடன் அஸ்வினி குமாரின் வீட்டுக்கு வந்தார்.
அடித்து கொலை
அஸ்வினிகுமார் சம்பளம் வாங்கிவிட்டு பொய் சொல்வதாக தெரிவித்தார். அப்போது அவருக்கும், அஸ்வினிகுமாருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. இந்த தகராறு முற்றியதில் அவர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். நரேந்திர ரானேயும், ராகுல் ராவுத்தும் சேர்ந்து அஸ்வினிகுமாரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதனால் அதிச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து நரேந்திர ரானே, ராகுல் ராவுத் இருவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story