குலுக்கல் நடந்து முடிந்து 7 மாதங்கள் ஆகியும் வீடுகளை ஒப்படைக்காத மகாடா பயனாளிகள் அதிருப்தி
குலுக்கல் நடந்துமுடிந்து7 மாதங்கள் ஆகியும் வீடுகளை மகாடா ஒப்படைக்காததால் பயனாளிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
மும்பை,
குலுக்கல் நடந்துமுடிந்து7 மாதங்கள் ஆகியும் வீடுகளை மகாடா ஒப்படைக்காததால் பயனாளிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
மகாடா வீடு
மராட்டிய வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியமான மகாடா பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் முதல் உயர் வருமானம் கொண்டவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் அடுக்குமாடி கட்டிடங்களில் வீடுகளை கட்டி குலுக்கல் முறையில் பயனாளிகளை தேர்வு செய்து, விற்பனை செய்து வருகிறது.
தனியார் கட்டிடங்களை விட மலிவான விலைக்கு கிடைப்பதால் மகாடா வீடுகளை வாங்க மும்பைவாசிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் 1,384 வீடுகளுக்கு மகாடா குலுக்கல் நடத்தி பயனாளிகளை தேர்வு செய்தது. ஆனால் இதுவரை அவர்களுக்கு வீடுகள் ஒப்படைக்கப்படவில்லை.
பயனாளிகள் அதிருப்தி
இதனால் அந்த வீடுகளை வாங்க தேர்வு செய்யப் பட்டு உள்ள பயனாளிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
இதுபற்றி பயனாளி ரமீஷ் தட்வி என்பவர் கூறுகையில், ‘‘நான் தற்போது டிட்வாலாவில் இருந்து மும்பைக்கு வேலைக்கு வருகிறேன். ரெயிலில் வருவதற்கு 2 மணி நேரம் ஆகிறது. மும்பையில் எனக்கு கிடைத்து உள்ள வீட்டை எப்போது மகாடா வழங்கும் என்பது தெரியவில்லை’’, என்றார்.
இதுபற்றி மகாடா மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், உடைமையாக்க சான்றிதழ் (ஓ.சி.) கிடைக்காததன் காரணமாகவே பயனாளிகளுக்கு இன்னும் வீடுகள் ஒப்படைக்கப்படவில்லை. 550 வீடுகளுக்கு மட்டுமே ஓ.சி. கிடைத்து உள்ளது. மற்ற வீடுகளுக்கும் இந்த சான்றிதழ் கிடைத்ததும் ஒப்படைத்து விடுவோம், என்றார்.
Related Tags :
Next Story