மருத்துவ அறிவியல் மையத்தில் வேலை


மருத்துவ அறிவியல் மையத்தில் வேலை
x
தினத்தந்தி 15 July 2019 3:58 PM IST (Updated: 15 July 2019 3:58 PM IST)
t-max-icont-min-icon

இந்திராகாந்தி வடகிழக்கு மண்டல மருத்துவ அறிவியல் மையம் ஷில்லாங்கில் செயல்படுகிறது.

தற்போது இந்த மருத்துவ மையத்தில் நர்சிங் அதிகாரி, ஹெல்த் எஜூகேட்டர், பார்மசிஸ்ட், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 264 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நர்சிங் அதிகாரி 231 பணியிடங்களும், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 24 பணியிடங்களும் உள்ளன. இதர பணிகளுக்கு ஒருசில இடங்கள் உள்ளன. துணை மருத்துவ படிப்புகள், அறிவியல் படிப்புகள், படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

சில பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும், சில பணிகளுக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, தபால் மூலம் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். விண்ணப்பம் மருத்துவ மைய முகவரியை ஆகஸ்டு 19-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://neigrihms.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

Next Story