ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் 2684 பணியிடங்கள்
மத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் 2 ஆயிரத்து 684 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
மினி ரத்னா அந்தஸ்து பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனம் பி.இ.சி.ஐ.எல்., டி.வி. ரேடியோ ஒளிபரப்பு- ஒலிபரப்பு தொடர்பான பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமான இதில் தற்போது திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 684 பேர், தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களாகும்.
இதில் ஸ்கில்டு மேன்பவர் பிரிவில் 1336 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். திறன் சாராத பணிப்பிரிவுகளில் 1342 இடங்கள் உள்ளன. கன்சல்டன்ட் (எலக்ட்ரிக்கல் என்ஜினீயர்) பணிக்கு 4 பேரும், அக்கவுண்ட்ஸ் எக்சிகியூட்டிவ் பிரிவில் 2 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:-
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 45 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
எலக்ட்ரிக்கல் அல்லது வயர்மேன் பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் அல்லது டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் திறன் சார்ந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் திறன் சாராத அலுவலக பணிகளுக்கும், பி.டெக் எலக்ட்ரிக்கல் படித்தவர்கள் கன்சல்டன்ட் பணிக்கும், பி.காம், எம்.காம், எம்.பி.ஏ. (நிதி) அக்கவுண்ட்ஸ் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 25-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.becil.com என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
Related Tags :
Next Story