தனியார் கல்லூரி வளாகத்தில் 7-வது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை
பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியின் வளாகத்தில் உள்ள 7-வது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வண்டலூர்,
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகுமார். இவரது மகன் ஸ்ரீராகவ் (வயது 21). இவர் சென்னை அருகே கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் தங்கி, அதே பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.டெக் 4-ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஐ.டி.பார்க் கட்டிடத்தின் 7-வது மாடியிலிருந்து ஸ்ரீராகவ் கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை சக மாணவர்கள் மீட்டு, அருகில் உள்ள எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் ஸ்ரீராகவ்வை பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை பற்றி தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பேராசிரியர்கள் யாராவது திட்டியதால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த மே மாதம் 26-ந்தேதி அனுப்பிரியா (21), என்ற மாணவி விடுதியில் உள்ள 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, மறுநாளே 27-ந்தேதி ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனிஷ் சவுத்ரி (19), என்ற மாணவர் எஸ்.ஆர்.எம். விடுதியில் உள்ள 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் பல்கலைக்கழகத்தில் மாணவி உள்பட 3 பேர் கல்லூரி வளாகத்தில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story