கார் மோதி 4 பேர் படுகாயம் டிரைவர் கைது


கார் மோதி 4 பேர் படுகாயம்  டிரைவர் கைது
x
தினத்தந்தி 16 July 2019 4:15 AM IST (Updated: 16 July 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

கார் மோதி 4 பேர் படுகாயம் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சண்டன் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 41). இவரது மனைவி வசந்தி(35), மகன் சஞ்சய்(13) மற்றும் உறவினர் விழுப்புரம் மாவட்டம், கொங்கராம்பாளையம் கிராமத்தை சேர்ந்த காத்தவராயன் மகள் திவ்யா(12). இவர்கள் 4 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டம் சென்றுவிட்டு சண்டன் கிராமம் நோக்கி பிச்சனூர் அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சக்திவேலை(69) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story