திருவாரூரில் மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டத்தில் தீர்மானம்
மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து இன்று(செவ்வாய்க்கிழமை) திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர்,
திருவாரூரில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத் முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) திருவாரூர் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைத்தலைவர் புண்ணீஸ்வரன், சாலையோர பழக்கடை சங்க மாவட்ட செயலாளர் செல்வம், மீனவர் சங்க மாவட்ட செயலாளர் சின்னதம்பி, குடிநீர் வடிகால் வாரிய செயலாளர் சுவாமி நாதன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சங்க தலைவர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story