மாவட்ட செய்திகள்

பரங்கிப்பேட்டை அருகே, சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த தொழிலாளி கைது + "||" + Near Parangipettai, Worker kidnapped a married girl arrested

பரங்கிப்பேட்டை அருகே, சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த தொழிலாளி கைது

பரங்கிப்பேட்டை அருகே, சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த தொழிலாளி கைது
பரங்கிப்பேட்டை அருகே சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை, 

பரங்கிப்பேட்டை அருகே பஞ்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது 28). தொழிலாளி. இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமியை கடந்த 6-ந்தேதி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சிறுமியின் தந்தை பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சிங்காரவேலு திருப்பூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா (பொறுப்பு) மற்றும் போலீசார் திருப்பூருக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த சிங்காரவேலை மடக்கி பிடித்தனர்.

மேலும் அவர் கடத்தி சென்று திருமணம் செய்த சிறுமியை மீட்டனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரரையும் பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததாக சிங்காரவேலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் சிறுமியை கடலூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சமயபுரத்தில் மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது
சமயபுரத்தில் மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற தந்தை-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. நாகர்கோவில் பஸ் நிலையத்தில் சிறுமியை கடத்திய பெண் கைது பரபரப்பு தகவல்கள்
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் சிறுமியை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
3. சிலை கடத்தல் வழக்கில், சென்னையில் கைதான பெண் தொழில் அதிபரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
சிலை கடத்தல் வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட பெண் தொழிலதிபரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
4. குமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
குமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து, கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
5. சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டதில் சர்ச்சை கருத்து: ருமேனியாவில் பெண் மந்திரி நீக்கம் - பிரதமர் அதிரடி நடவடிக்கை
ருமேனியாவில், சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டதில் சர்ச்சை கருத்து தெரிவித்த, பெண் மந்திரியை நீக்கம் செய்து பிரதமர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.