காமராஜர் பிறந்தநாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை


காமராஜர் பிறந்தநாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை
x
தினத்தந்தி 16 July 2019 5:43 AM IST (Updated: 16 July 2019 5:43 AM IST)
t-max-icont-min-icon

காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி,

கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராஜா தியேட்டர் சந்திப்பில் உள்ள அவரது சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், சமூக நல வாரிய தலைவி வைஜெயந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், காங்கிரஸ் நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, பெத்தபெருமாள், தேவதாஸ், ஏ.கே.டி.ஆறுமுகம், வீரமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கட்சி தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் திருமுருகன், சுகுமாறன், முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொதுச்செயலாளர் பாலன், கோபி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கட்சி அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அங்கு காமராஜரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய ரங்கசாமி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநில செயலாளர் வேல்முருகன் தலைமையில் காமராஜரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் அருள், புதுவை துணை செயலாளர் சுப்ரமணி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.டி.சேகர், தொழிற்சங்க செயலாளர் தமிழ்செல்வன், மகளிர் அணி செயலாளர் விமலாஸ்ரீ, நகர செயலாளர் லோகநாதன், இலக்கிய அணி செயலாளர் ஆனந்தன், தொகுதி செயலாளர்கள் ராஜாராம், முருகன், காண்டீபன், ராஜா, ரத்தினகுமார், சுதாகர், சுரேஷ், மணிகண்டன், சிராஜ், மகளிர் அணி காமாட்சி, பிரேமா, புஷ்பவள்ளி, தகவல் தொழில்நுட்ப அணி மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புதிய நீதிக்கட்சியினர் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ராமகாமராஜ், பொன்.நடராஜன், தேவநாதன், மோகன், வேல்பாரி, கேசவன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புதுவை மாநில சிவாஜி பேரவையினர் உழந்தைகீரப்பாளையத்தில் உள்ள சிவாஜி பேரவை அலுவலகத்தில் காமராஜர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிவாஜி பேரவை தலைவர் கமலக்கண்ணன், புதுவை மாநில காங்கிரஸ் செயலாளர் ராதாகிருஷ்ணரெட்டியார், காங்கிரஸ் பிரமுகர் திருவேங்கடம், சிவாஜி பேரவை நிர்வாகிகள் முருகன், கனகராஜ், இளங்கோ, கிருஷ்ணமூர்த்தி, அண்ணாமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story