கல்லூரி மாணவி சாவு, தற்கொலைக்கு தூண்டிய காதலன் கைது


கல்லூரி மாணவி சாவு, தற்கொலைக்கு தூண்டிய காதலன் கைது
x
தினத்தந்தி 17 July 2019 4:00 AM IST (Updated: 16 July 2019 11:52 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய காதலனை போலீசார் கைது செய்தனர்.

வடமதுரை, 

வடமதுரை அருகே உள்ள நாட்டாமைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேல். இவருக்கு மாலதி (வயது 19), கிருத்திகா (10) என்ற மகள்கள் உள்ளனர். மாலதி எரியோடு அருகே உள்ள ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். கிருஷ்ணவேல் தனது மனைவியுடன் கேரளா மாநிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இதனால் மாலதியும், கிருத்திகாவும் அதே பகுதியில் உள்ள தங்களது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மாலதி தனது அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் வடமதுரை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாலதி கோவுகவுண்டன்பட்டியை சேர்ந்த தொழிலாளி கோபிநாத்(வயது 23) என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது. கோபிநாத் ஏற்கனவே திருமணமானவர். இதனை மறைத்து மாலதியை, கோபிநாத் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாலதிக்கு தெரியவரவே கோபிநாத்திடம் முறையிட்டுள்ளார். அப்போது மாலதியை, கோபிநாத் தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாலதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கோபிநாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story