குடிமராமத்து திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


குடிமராமத்து திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 July 2019 4:15 AM IST (Updated: 17 July 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து திட்டப்பணிகள் மற்றும் மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதியின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் நேரில் ஆய்வு செய்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறையின் சார்பில் அரியலூர் வட்டம், மல்லூர், கல்லக்குடி, நெரிஞ்சிக்கோரை மற்றும் புத்தூர் ஆகிய கிராமங்களில் குடிமராமத்து திட்டப்பணிகள் மற்றும் மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதியின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

மல்லூரிலிருந்து நைனேரியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஏரியின் கரைகள், வரத்துவாய்க்கால், வடிகால் மற்றும் ஏரியிலுள்ள 2 மதகுகளில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளையும், கல்லக்குடி பெரிய ஏரியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டு, பாசனதாரர் விவசாயிகளிடம் சரியான முறையில் வரவு- செலவு பதிவேட்டினை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் நடைபெறும் பணிகளை அனைத்து உறுப்பினர்களும் தினந்தோறும் பார்வையிட வேண்டும்.

நெரிஞ்சிக்கோரை ஈஸ் வரன் கோவில் ஏரி ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கரைகள் பலப்படுத்தும் பணி, மதகுகள் புனரமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதையும், புத்தூர் கிராமத்தில் மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதியின் கீழ் உப்போடை குருக்கே ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப் பணையையும், உப்போடை யில் அதன் கரைகள் பலப் படுத்தும் பணியினையும் பார்வையிட்டு, பணிகள் நல்ல முறையில் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. இதனால் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்கும் மற்றும் குடிநீர் தேவைக்கும் பயனுள்ளதாக அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி பொறியாளர் மருதமுத்து மற்றும் பாசனதாரர் சங்க உறுப்பினர்கள், விவசாயிகள், அலுவலர்கள் உடனிருந்தனர். 

Next Story