அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை குமாரசாமி மிரட்டுகிறார் பா.ஜனதா குற்றச்சாட்டு
அதிருப்தி எம்.எல்.ஏ.க் களை குமாரசாமி மிரட்டுவதாக பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.
பெங்களூரு,
பா.ஜனதாவை சேர்ந்த ஏ.எஸ்.பட்டீல் நடஹள்ளி எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மூத்த எம்.எல்.ஏ.வான ரோஷன் பெய்க்கை சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) போலீசார் கைது செய்துள்ளனர். இதை நாங்கள் கண்டிக்கிறோம் 19-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று எஸ்.ஐ.டி. உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதற்குள்ளேயே விமான நிலையத்தில் ரோஷன் பெய்க்கை போலீசார் கைது செய்தது சரியல்ல. அந்த எஸ்.ஐ.டி. அமைப்பு சுதந்திரமாக செயல்படுவதை நாங்கள் எதிர்க்க மாட்டோம்.
ரோஷன் பெய்க்கின் ராஜினாமா கடிதம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. அவரது பிறந்த நாளையொட்டி வெளியூர் செல்ல திட்டமிட்டிருந்தார். சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், ரோஷன் பெய்க்கை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் எம்.எல்.ஏ.க்களின் உரிமைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. ரோஷன் பெய்க்கை பாதுகாக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஏ.எஸ்.பட்டீல் நடஹள்ளி கூறினார்.
ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கூறும்போது,. “ஆட்சியை காப்பாற்ற முதல்-மந்திரி குமாரசாமி குறுக்கு வழியில் முயற்சி செய்கிறார். எஸ்.ஐ.டி.யை ஒரு ஆயுதமாக குமாரசாமி பயன்படுத்துகிறார். உள்நோக்கத்துடன் ரோஷன் பெய்க்கை போலீசார் கைது செய்ததை நாங்கள் எதிர்க்கிறோம்“ என்றார்.
குமாரசாமி எம்.எல்.ஏ. கூறும்போது, “நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பிடித்து வைத்துக்கொள்ள குமாரசாமி முயற்சி செய்கிறார். இதன் மூலம் கிரிமினல் தந்திரத்தை அவர் பயன்படுத்துகிறார். முதல்-மந்திரியின் நடை மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்“ என்றார்.

Related Tags :
Next Story