புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - அன்பழகன் எம்.எல்.ஏ. சொல்கிறார்
புதுவையில் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி இருந்தபோது மக்களை பாதிக்கும் நீட், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது மக்களை ஏமாற்ற போராட்டம் என்ற நாடகத்தை நடத்தி வருகின்றனர்.
புதுவை பட்ஜெட் தொடர்பாக சட்டமன்ற கூட்டம் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடப்படவில்லை. திட்டக்குழு கூட்டம் நடத்தப்பட்டு பட்ஜெட்டில் அறிவிக்கவேண்டிய நிதி ஒதுக்கீடு குறித்து அறிவித்துவிட்டனர்.
புதுவை மாநிலத்தின் வருமானத்தை பெருக்க மதுபான கொள்முதலை அரசே மேற்கொள்ள வேண்டும் என்று நான் ஆலோசனை வழங்கினேன். அதை கவர்னரும் பாராட்டினார். ஆனால் அதற்காக இதுவரை ஒரு நடவடிக்கைக்கூட எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் கவர்னர் தலையிட்டு வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உயர்கல்வியில் கரைக்காலுக்கு 18 சதவீதமும், மாகிக்கு 4 சதவீதமும், ஏனாமுக்கு 3 சதவீதமும் பிராந்திய இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் மீதமுள்ள 75 சதவீதம் புதுச்சேரி மாணவர்களுக்கு என்று ஒதுக்கப்படவில்லை. அந்த இடங்களிலும் பிற பிராந்தியங்களை சேர்ந்த மாணவர்கள் வந்து சேர்ந்துகொள்கின்றனர்.
இந்த இடஒதுக்கீடு என்பது சட்டவிரோதமானது. இந்த இடஒதுக்கீட்டை ரத்துசெய்துவிட்டுதான் சென்டாக் கலந்தாய்வினை நடத்த வேண்டும். இதற்காக அமைச்சரவையை கூட்டி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கர்நாடகா, கோவாவை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆட்சி மாற்றம் நடைபெறும். புதுச்சேரியில் இன்னும் சில நாட்களில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் வெளியில் தெரியவரும். ஏற்கனவே சபாநாயகர் பதவியேற்பில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் கலந்துகொள்ளவில்லை.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Related Tags :
Next Story